

கரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு முதல் தவணையாக தலா ரூ.2,000 வீதம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதையடுத்து, உணவு பொருள் வழங்கல் துறை மூலமாக இந்த நிதியை வழங்குவது குறித்த நடைமுறை வெளியாகி உள்ளது.
அதில், “குடும்பத்தில் ஒருவர் வந்து ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் கைரேகை வைத்துவிட்டு, பணத்தை பெற்றுச் செல்ல வேண் டும்” என கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, தமிழகம் முழு வதும் பயோமெட்ரிக் முறையில் சர்வர் இணைப்பு கிடைக்காமல் பொதுமக்கள் நீண்ட நேரம் ரேஷன் கடைகளில் காத்திருக்க வேண்டியுள்ளது.
மேலும், பயோமெட்ரிக் இயந்திரத்தில் ஒவ்வொருவரும் கைரேகையை பதிவு செய்யும் போது, அதன் மூலம் கரோனா தொற்று பரவல் ஏற்பட வாய்ப் புள்ளது.
எனவே, தமிழக அரசு பயோ மெட்ரிக் முறை இல்லாமல், நிவாரண நிதிக்கான டோக்கனை வழங்க வீடுகளுக்குச் செல்லும் போதே, அந்தத் தொகையை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.