

திருச்சி கே.கே.நகர் அய்யப்பநகர் கட்டப்பொம்மன் தெருவைச் சேர்ந்தவர் கீதா(43). இவர் திருச்சி மாநகர ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் இளையராஜா(44) கீரனூர் காவல்நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 17, 9 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கீதா நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கே.கே.நகர் போலீஸார் கீதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் நடத்திய விசார ணையில் மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.