Published : 08 May 2021 03:15 AM
Last Updated : 08 May 2021 03:15 AM

திண்டுக்கல்லில் சாமியார் போல திரிந்தவரை அழைத்துச்செல்ல வந்த குடும்பத்தினர் முன் மறியல் : கதறி அழுதவர்களை சமாதானப்படுத்திய போலீஸ்

திண்டுக்கல்லில் சாமியாராக வலம் வந்தவரை அவரது குடும்பத்தினர் அழைத்துச் செல்ல வந்தபோது ஏராளமானோர் தடுத்து மறியலில் ஈடுபட்டதோடு கண்ணீர்விட்டு கதறினர்.

பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியநாதன் (68), முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி பிரபாவதி. இவர்களுக்கு ஐந்து மகள்கள். ஓய்வுக்குப்பின் சொந்த ஊரில் வசித்து வந்த இவர், திடீரென மாயமானார். குடும்பத்தினர் பல ஆண்டுகளாகத் தேடியும் கண்டறிய முடியவில்லை.

இந்நிலையில், திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோயில் பகுதியில் நீண்ட தலை முடி, அழுக்கான காவி வேட்டி, சட்டையுடன் ஒருவர் சுற்றித்திரிந் தார். யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்த இவரை, சிலர் வழிபடத் தொடங்கினர். இவரிடம் ஆசீர்வாதம் பெற வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வரத்தொடங்கினர்.

இதற்கிடையே, இருப்பிடத்தை அறிந்து திண்டுக்கல் வந்து குடும்பத்தினர் அழைத்தபோது பாக்கியநாதன் மறுத்துவிட்டார். இதனால், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஆனால், பாக்கியநாதன் உடல்நிலை பாதித்து கடைவாசலில் படுத்திருப் பதாகக் கேள்விப்பட்டு இவரது குடும்பத்தினர் அழைத்துச் செல் வதற்காக மீண்டும் திண்டுக் கல் வந்தனர். அப்போது அழைத்துச் செல்லக்கூடாது என இவரிடம் ஆசிர்வாதம் பெறு வோர் வாக்குவாதத்தில் ஈடு பட்டு தடுத்தனர். இதையடுத்து பாக்கியநாதன் மனைவி பிரபாவதி திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸார் அவரை குடும்பத்தி னருடன் அனுப்பிவைக்க முயன் றனர். இதற்கு எதிர்ப்புத் தெரி வித்து ஏராளமானோர் அவரை அழைத்துச்செல்ல வந்த கார் முன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.பின்னர் மறியலில் ஈடுபட்ட வர்களைச் சமாதானப்படுத்தி பாக்கியநாதனை அவரது குடும்பத்தினருடன் போலீஸார் அனுப்பி வைத்தனர். அப்போது பலர் கண்ணீர்விட்டு கதறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x