கரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் - புதுகை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு வாய்ப்பு : பாதுகாப்பாக இருக்க மருத்துவர்கள் வேண்டுகோள்

கரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் -  புதுகை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு வாய்ப்பு :   பாதுகாப்பாக இருக்க மருத்துவர்கள் வேண்டுகோள்
Updated on
1 min read

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக் சிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள் ளனர்.

இதுகுறித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவர்கள் கூறியது: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை பிரிவில் உள்ள 450 படுக்கைகளில் 320 படுக்கைகளில் ஆக்சிஜன் அளிக்கும் வசதி உள்ளது. தற் போது 85 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு, 12,000 லிட்டர் கொள்ளளவில் ஆக்சிஜன் டேங்க் உள்ளது. அதில், 2 நாட்களுக்கு ஒரு முறை சுமார் 6,000 லிட்டர் ஆக்சிஜன் நிரப்பப்படுகிறது. தற் போது கரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதால் ஆக்சிஜன் தேவையும் அதிகமாக உள்ளது. தற்போது, தேவையை விட இருப்புஅதிகம் உள்ளது. கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் ஆக்சிஜன் வழங்குவதற்கு தேவையான கருவி களுக்கும் பற்றாக்குறை ஏற்படும். எனவே, பொதுமக்கள் அனை வரும் பாதுகாப்பாக இருப்பதே நல்லது என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in