தனியார் பாலிடெக்னிக்கில் 150 படுக்கைகளுடன் கரோனா மையம் :

திருநெல்வேலி அருகே தருவை தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 150 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு நேற்று பார்வையிட்டார்.
திருநெல்வேலி அருகே தருவை தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 150 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு நேற்று பார்வையிட்டார்.
Updated on
1 min read

திருநெல்வேலி அருகே தருவையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 150 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளொன்றுக்கு 700 பேர் வரைகரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் 1,240 படுக்கைகள் உள்ளது. அதில் 800 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி இருக்கிறது. அதிக பாதிப்பு உள்ளவர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். ஓரளவுக்கு பாதிப்பு உள்ளவர்கள் கூடங்குளம் அரசுமருத்துவமனை, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். இதுதவிர மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கரோனா சிகிச்சை மையங்களை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் மகாராஜநகர் மாநகராட்சி திருமண மண்டபத்தில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணிநடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாநகர நல அலுவலர் சரோஜா, மண்டல உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், சுகாதார ஆய்வாளர் நடராஜன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். திருநெல்வேலிஅருகே தருவையிலுள்ள தனியார்பாலிடெக்னிக் கல்லூரியில் கரோனா சிகிச்சை மையம் 150 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு நேற்று பார்வையிட்டார்.

வி.கே.புரத்தில் அபராதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in