Published : 08 May 2021 03:15 AM
Last Updated : 08 May 2021 03:15 AM

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் - ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க ஏற்பாடு : ஆட்சியர் சிவன் அருள் தகவல்

திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகள் விரைவாக நடந்து வருவதாக மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.

திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் கரோனா நோயாளிகள் சிகிச்சைப்பெற சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, 200-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆக்சிஜன் பற்றாக்குறையால் 4 பேர் உயிரிழந் ததாக வதந்தி பரவியதால் சலசலப்பு ஏற்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்த மருத்துவமனை தலைமை மருத்துவர் திலீபன், உயிரிழந்த 4 பேரும் வெவ்வேறு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந் தனர். மருத்துவமனையில் போது மான அளவுக்கு ஆக்சிஜன் இருப்பு உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டு, கரோனா தனிமைப்படுத்தும் அவசர சிகிச்சை வார்டில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்.

கரோனா பாதுகாப்பு உடை அணிந்து மாவட்ட ஆட்சியர் கரோனா சிறப்பு வார்டுக்குள் சென்று அங்கு சிகிச்சையில் இருந்த 80 கரோனா நோயாளிகளிடம் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும், ஆக்சிஜன் அளவு, அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர், அரசு மருத்துவ மனையில் அமைந்துள்ள கரோனா தனிமைப்படுத்தும் சிறப்பு வார்டுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அங்கு தரைதளம், முதல்தளம் ஆகிய வற்றில் கரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செயற்கை சுவாச உதவியுடன் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகிறதா? நோயாளிகளின் உடல் நிலை, மருத்துவ சிகிச்சை குறித்து அங்குள்ள மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இதையடுத்து, செய்தியாளர் களிடம் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் மருத்துவ மனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

அதேபோல, மருத்துவர்களும், செவிலியர்களும் கூடுதலாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் ஆக்சிஜன் இருப்பு தினசரி கண்காணிக் கப்பட்டு பூர்த்தி செய்து நோயாளி களுக்கு சீரான ஆக்சிஜன் வழங்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கரோனா நோயாளிகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும், உயிரிழப்புகளை குறைக்கவும் கூடுதல் கவனம் செலுத்த சுகாதாரத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளுடன் உறவினர்கள் இருக்க அனுமதியில்லை. நோயாளிகளை கவனிக்க மருத்துவர்களும், செவிலியர்களும் உள்ளனர். அரசு மருத்துவ மனையில் சுழற்சி முறையில் மருத்துவர்களும், செவிலியர்களும் பணியில் ஈடுபட்டு வருவதால் உறவினர்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.

நோயாளிகளின் உடல் நிலை குறித்து வெளியில் இருந்தபடி கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும். கரோனா வார்டுக்குள் நுழைந்து நோய் தொற்றுக்கு ஆளாக வேண்டாம். ஒவ்வொருவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 6-ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப் பட்டுள்ளன.

அரசின் புதிய கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடியிருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.

தேவையில்லாமல் யாரும் வெளியே வர வேண்டாம். குறிப்பாக, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அவசியம், தனி மனித இடைவெளியும் அவசியம் என்பதை மக்கள் உணர வேண்டும்.

அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. அதை மக்கள் பின்பற்ற வேண்டும். மக்கள் நினைத்தால் மட்டுமே கரோனாவை விரட்டியடிக்க முடியும். அரசு கூறும் அறிவுரைகள் நமக்கானது என மக்கள் உணர வேண்டும். கரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கரோனா பரிசோதனைக்கான முடிவுகளை விரைவாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரு கிறது. திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப் படும். அதற்கான ஏற்பாடுகள் விரைவாக நடந்து வருகிறது’’ என்றார்.

இந்த ஆய்வின் போது திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் திலீபன், மருத்துவர்கள் பிரபாகரன், ஜனனி உட்பட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x