ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு - ரூ.50 லட்சத்தில் மருத்துவக் கருவிகள் வழங்கிய கல்பாக்கம் அணு மின்நிலையம் :

கல்பாக்கம் அணுமின் நிலையம் வழங்கிய மருத்துவக் கருவிகளை மருத்துவமனை டீன் எம்.அல்லியிடம் வழங்கினார் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
கல்பாக்கம் அணுமின் நிலையம் வழங்கிய மருத்துவக் கருவிகளை மருத்துவமனை டீன் எம்.அல்லியிடம் வழங்கினார் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
Updated on
1 min read

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, கல்பாக்கம் அணுமின் நிலைய சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளா கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், டீன் எம்.அல்லியிடம் உபகரணங்களை வழங்கினார். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) எம்.பிரதீப்குமார், கல்பாக்கம் அணு மின் நிலையப் பிரதிநிதி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் ஆட்சியர் கூறிய தாவது: மாவட்டத்தில் 1227 பேர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1500 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந் நிலையில், கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பில் 7 இ.சி.ஜி. இயந்திரம், 27 நெபுலைசர் கருவி, 5 கேவி திறன் கொண்ட 3 ஜெனரேட்டர்கள், 30 தெர்மோ மீட்டர்கள், 104 ரத்த குளுக்கோமீட்டர், 42 பீட்டல் டாப்ளர் உள்ளிட்டவை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவற்றை உரிய முறையில் பயன் படுத்த வேண்டும் என்றார்.

பின்னர் ஆட்சியர் பட்டணம் காத்தான் அருகே உள்ள கண்ணன் கோவில் தெரு, ராம் நகர் மற்றும் உச்சிப்புளி ஆகிய பகுதிகளுக்குச் சென்று கரோனா தடுப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in