

தென்காசி மாவட்டத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைத்த நிலையில் கடந்த சில நாட்களாக, ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.
நேற்று முன்தினம் மாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரையான 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் அதிகபட்சமாக சங்கரன்கோவிலில் 70 மி.மீ. மழை பதிவானது. தென்காசியில் 6.20 மிமீ, சிவகிரியில் 6, ராமநதி அணையில் 5, செங்கோட்டையில் 4 மற்றும் குண்டாறு அணையில் 2 மிமீ மழைபதிவானது. கடனாநதி அணை நீர்மட்டம் 66.80 அடியாகவும், ராமநதிஅணை56.50, கருப்பாநதி அணை49.87 மற்றும் குண்டாறு அணை நீர்மட்டம் 28.50 அடியாகவும் இருந்தது. அடவிநயினார் அணை வறண்டு கிடக்கிறது.
திருநெல்வேலி
நாகர்கோவில்
பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 431 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 41.45 அடியாக உயர்ந்தது. பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 116 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளநிலையில், நீர்மட்டம் 54 அடியாக உயர்ந்துள்ளது. சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் 6 அடியை கடந்தது. பொய்கையில் 17.20 அடி, மாம்பழத்துறையாறில் 14.60 அடியாக நீர்மட்டம் உள்ளது. மழை பெய்தாலும் முக்கடல் அணைக்கு நீர்வரத்து இல்லாததால் 1.6 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.