

மேற்குவங்க தேர்தல் வன்முறை யில் 12 பேர் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி, பாஜக சார்பில் திருநெல்வேலி தச்சநல்லூர் காந்தி சிலைமுன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வடக்கு மண்டல தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் கணேசமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இதுபோல், திருநெல்வேலி சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் தெற்கு மண்டல பொறுப்பாளர் முருகப்பா, மாவட்ட பொதுச்செயலாளர்கள் கணேசமூர்த்தி, முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தென்காசி
தூத்துக்குடி
கோவில்பட்டி
இதேபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.