

திருப்பத்தூரில் வீட்டுக்குள் நுழைந்த பாம்பை தீயணைப்புத்துறையினர் பிடித்து காப்புக்காட்டில் விட்டனர்.
திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அட்வகேட் ராமநாதன் தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர், நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தாருடன் வீட்டில் இருந்தார். அப்போது வீட்டுக்குள் திடீரென பாம்பு ஒன்று நுழைந்தது. இதைக்கண்ட ராமமூர்த்தி உட்பட அனைவரும் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்து கூச்சலிட்டனர். இதுகுறித்து திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், தீயணைப்புத்துறை வீரர் சிவா அங்கு வந்து வீட்டுக்குள் தஞ்சமடைந்த பாம்பை லாவகமாக பிடித்து, ஜலகம்பாறை காப்புக்காட்டில் விட்டார்.