Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் - போட்டித் தேர்வுகளுக்கு இணைய வழி இலவச பயிற்சி :

சேலம்

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை தேர்வுக்கு இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது.

இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக பல்வேறு வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், அரசுப்பணி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றது.

தற்போது, கரோனா தொற்று பரவல் காரணமாக அலுவலகத்தில் வகுப்புகள் நடத்த இயலாத நிலை உள்ளது. எனவே, கிராமப்புற மாணவர்கள் உட்பட அனைத்து போட்டியாளர்களும் வீட்டில் இருந்தபடியே பயனடையும் வகையில் இணையம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி வரும் 7-ம் தேதி காலை 11 மணியளவில் டிஎன்பிஎஸ்சி தொகுதி 2 மற்றும் தொகுதி 4 மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை தேர்வுகளுக்கு வரும் 10-ம் தேதி காலை 11 மணிக்கு இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள் தொடங்க வுள்ளன.

பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. இப்போட்டித் தேர்வுக்கு தயாராகும் விருப்பமுள்ள மாணவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

https://tamilnaducareer services.tn.gov.in என்ற இணையதளத்தில் காணொலி வழி கற்றல், பாடக்குறிப்புகள், போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மாதிரித் தேர்வுகள் உள்ளிட்டவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் பாடக்குறிப்புகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொண்டு பயன் பெறலாம்.

மேலும், விவரங்கள் அறிய சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய 0427-2401750 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x