கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளுடன் - சலூன் கடைகளை நடத்த அனுமதிக்க வேண்டும் : முடி திருத்தும் தொழிலாளர்கள் மீண்டும் கோரிக்கை
கரோனா பரவல் தடுப்பு வழிமுறைக ளுடன் சலூன் கடைகளை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று முடி திருத்தும் தொழிலாளர்கள் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.செல்வராஜ், செயலாளர் பி.தர்மலிங்கம் உள்ளிட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு:
கடந்தாண்டு கரோனா ஊரடங் கால் முடி திருத்தும் தொழிலாளர் கள் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் அவதிப்பட்டனர். பசி கொடுமை மற்றும் கடன் சுமையால் மனமுடைந்து சிலர் தற்கொலை செய்து கொண்ட துயரங்களும் நேரிட்டன. இந்தநிலையில், மீண் டும் சலூன் கடைகளை மூட உத்தர விட்டுள்ளதால் முடி திருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இதுதொடர்பாக கடந்த 26-ம் தேதி மனு அளித்தும் உரிய பதில் இல்லை. எங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்து, கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளுடன் சலூன் கடைகளை நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
