திருச்சி மாவட்டத்தில் - ஒப்பந்த செவிலியர்கள் 34 பேர் பணி நிரந்தரம் :

திருச்சி மாவட்டத்தில்  -  ஒப்பந்த செவிலியர்கள் 34 பேர் பணி நிரந்தரம் :
Updated on
1 min read

தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத் துவமனைகளில் செவிலியர்களின் தேவையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த செவிலியர்கள் 1,212 பேரை பணி நிரந்தரம் செய்து மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், இவர்கள் அனைவரும் மே 10-ம் தேதிக்குள் சென்னையில் பணி யில் சேர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் பணி யாற்றி வந்த இவர்கள் இதுவரை மாதந்தோறும் ரூ.15,000 ஊதியம் பெற்று வந்த நிலையில், இனி மாதந்தோறும் ரூ.40,000 ஊதியம் பெறவுள்ளனர். அரசின் இந்த பணி நிரந்தரம் உத்தரவின் கீழ், திருச்சி மாவட்டத்தில் செவிலியர்கள் 34 பேர் பயன் பெறவுள்ளனர்.

ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை மனப்பூர்வமாக வரவேற்கும் அதேவேளையில், மாநிலம் முழுவதும் அரசின் மருத் துவத் துறையில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செவிலி யர் சங்கங்கள் வலியுறுத்தி உள் ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in