Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM

மண்புழு உரம் தயாரிப்பு குறித்து செயல்விளக்கம் :

காரைக்கால் மாவட்டம் மாதூர் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் மண்புழு உரம் தயாரிப்பு குறித்த செயல்விளக்க முகாம், திருநள்ளாறு அருகே உள்ள பேட்டை கிராமத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

முகாமுக்கு, வேளாண் அறிவியல் நிலைய முதல்வரும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான குமார.ரெத்தினசபாபதி தலைமை வகித்தார். உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் அரவிந்த், மண்புழு உரம் தயாரிப்பு குறித்து விவசாயிகளிடம் கூறியது: பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப, உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது காலத்தின் கட்டா யமாகும். அதன் பொருட்டு பயிருக் குத் தேவையான ஊட்டச் சத்து களை வழங்க, ரசாயன உரங்களை மட்டும் சார்ந்திருக்காமல், இயற்கை உரங்களையும் இட்டு மண்வளத் தையும், சுற்றுச்சூழலையும் பாது காப்பது அவசியமானது. இதற்கு மண்புழு உர தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு கைகொடுக்கும். வேளாண்மையின் முக்கிய அங் கமாக மண்புழு உரம் திகழ்கிறது. மண்புழு உரத்தில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, தாவர வளர்ச்சி ஊக்கிகள், என்சைம்கள், ஹார்மோன்கள் உள்ளன என்றார்.

தொடர்ந்து, மண்புழு உரம் தயாரிப்பு குறித்து செயல்விளக் கம் அளிக்கப்பட்டது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x