

திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூரைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் சந்தனகுமார் (19). இவர், நேற்று சிந்துப்பூந்துறை மின் மயானம் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது, திடீரென நீரில் மூழ்கியுள்ளார். தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் சந்தனகுமார் சடலமாக மீட்கப்பட்டார். திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.