Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

கோவை தொழில் துறையினர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து :

தமிழக சட்டப்பேரவை தேர்தலில்வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கோவைதொழில் அமைப்புகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும்குறுந் தொழில் முனைவோர் சங்கம் (டாக்ட்) அமைப்பின் கோவைமாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ்:

தமிழக முதல்வராக பொறுப் பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். கோவை மாவட்டத்தில் 9 தொகுதிகளில் சிறு சிறு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர்கள் வெற்றியை இழந்ததற்குபல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், திமுக ஆட்சியில் கோவை மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்பது வேதனையளிப்பதாக உள்ளது.

தொழில் நிறைந்த இம்மா வட்டத்தில் தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள தங்களின் சிறப்பான பார்வை எங்களுக்கு வேண்டும். நிச்சயம் இருக்கும் என்று நம்புகிறோம்.

தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்க (சீமா) தலைவர் கே.வி.கார்த்திக்:

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு சீமாசார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.மு.க.ஸ்டாலி னின் தலைமைப் பண்பு மற்றும்அனுபவம் மூலமாக தமிழகத்தில் தொழில் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் சீமா ஒத்துழைப்பு அளிக்கும்.

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளையின் தலைவர் சி.பாலசுப்ரமணியன்:

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுகவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். தொழில் வர்த்தக சபை மற்றும் வர்த்தகம், தொழில் நிறுவனங்களின் சங்கங்கள் அனைத்தும் தமிழக அரசுடன் இணக்கமாக இருந்து பணிபுரிய விரும்புகிறோம். தங்களது தேர்தல்அறிக்கையில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்படும் என தெரிவித்துள்ளீர்கள்.

எங்களது வர்த்தக சபை சார்பில் வளர்ச்சி, கட்டமைப்பு தேவைகள் குறித்து ஏற்கனவே தெரிவித்துள்ளோம். உரிய நடவடிக்கைகளை தங்களது அரசு மேற்கொள்ளும் என நம்புகிறோம். தொழில் நகரமான கோவைக்கும், எங்களது வர்த்தக சபைக்கும் தங்களது வருகையை எதிர்பார்த்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x