Published : 04 May 2021 03:13 am

Updated : 04 May 2021 03:13 am

 

Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

சென்னையில் - ஆன்லைன் மூலம் மீன்களை ஆர்டர் செய்யும் வசதி நீட்டிப்பு :

சென்னை

சென்னையில் ஆன்லைன் மூலம் மீன்களை ஆர்டர் செய்யும் வசதி பெருங்குடி, தரமணி உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இக்காலக்கட்டத்தில் பொதுமக்கள் மீன்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்க வசதியாக meengal என்ற கைபேசி செயலி மற்றும் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள www.meengal.com இணையதளம் ஆகியவற்றின் மூலம் விருகம்பாக்கம், அண்ணாநகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத்தின் மீன் விற்பனை செய்யும் கடைகளை சுற்றியுள்ள 5 கி.மீ. தொலைவில் ஆர்டர் செய்பவர்களின் வீடுகளுக்கு நேரடியாக கொண்டு சென்று மீன்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.


இணையதளம் மூலமாக மீன்களை ஆர்டர் செய்யும் வசதியை பொதுமக்களும் ஆவர்முடன் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வசதி பெருங்குடி, தரமணி. துரைப்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மீன்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கும் வசதி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஊரடங்கு காலத்தில் இந்த வசதியை அதிகளவிலான மக்கள் பயன்படுத்தினர். தற்போது கூட ஆன்லைனில் ஆர்டர் செய்து மீன்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எனவே, ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வசதி பெருங்குடி, தரமணி. துரைப்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் படிப்படியாக இந்த வசதி விரிவுப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x