Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

மின்னாம்பள்ளி கால்நடை சந்தைக்கு மாடுகள் வரத்து 50% சரிவு :

கரோனா பரவல் அச்சம் காரணமாக சேலம் காரிப்பட்டி அடுத்த மின்னாம்பள்ளி சந்தைக்கு நேற்று குறைவான எண்ணிக்கையில் விற்பனைக்கு வந்த மாடுகள்.

சேலம்: கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சேலம் காரிப்பட்டி அடுத்த மின்னாம்பள்ளி சந்தைக்கு மாடுகள் வரத்து 50 சதவீதம் குறைந்தது.

மின்னாம்பள்ளியில் வாரந்தோறும் திங்கட் கிழமை நடைபெறும் கால்நடை சந்தைக்கு ஆத்தூர், வாழப்பாடி, காரிப்பட்டி, மின்னாம்பள்ளி, கூட்டாத்துப்பட்டி, செட்டிப்பட்டி, அத்தனூர்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் காளைகள், பசுக்கள், கன்றுக் குட்டிகள் உள்ளிட்டவைகள் 300-க்கும் அதிகமாக விற்பனைகு வரும்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற சந்தையின்போது, மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தான் மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.

இதுதொடர்பாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் மின்னாம்பள்ளி கால்நடை சந்தை முக்கியமானது. இங்கு கொண்டு வரப்படும் மாடுகளை வாங்கிச் செல்ல உள்ளூர் விவசாயிகள், வியாபாரிகள் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து செல்வர். இங்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விலையில் மாடுகள் விற்பனைக்கு கிடைக்கும்.

தற்போது, உழவுக்குப் பயன்படும் காளைகள் ஜோடி ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. கரோனா தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் காரணமாக, சந்தைக்கு வரும் வியாபாரிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. குறிப்பாக கேரள மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் வருகை குறைந்துள்ளன. உள்ளூர் வியாபாரிகள் வருகையும் குறைந்துள்ளது.

இதேபோல, சந்தைக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x