Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

கரோனா தொடர்பான - மாநகராட்சியின் சேவையை அறிய இணையதளம் :

கரோனா தொற்று பரவலைக்கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் சேவைகளை பொதுமக்களுக்கு தெரிவிக்க http://covid19.chennaicorporation.gov.in/ என்ற புதிய இணையதளத்தை மாநகராட்சி உருவாக்கியுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ட்விட்டர், ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மாநகராட்சியின் அனைத்து நடவடிக்கைகள் குறித்த தகவல்களை ஓரிடத்தில் பெற இந்த புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் சென்னையில் உள்ள கரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களின் விவரம், தடுப்பூசி2-வது தவணை கிடைக்கப்பெறாதவர்கள் விண்ணப்பிக்கும் வசதி, தினமும் சென்னையில் நடத்தப்படும் காய்ச்சல் பரிசோதனை முகாம் அமைவிடங்கள் குறித்த விவரம், கரோனா அறிகுறி இருந்தால் அவர்களிடம் மாதிரி சேகரிக்கும் இடம்,தொற்று உறுதி செய்யப்பட்டவர் களுக்கான முதல்கட்ட உடற்பரிசோதனை செய்யும் மையங்கள், கரோனா சிகிச்சை மையங்கள் போன்ற விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம்.

மேலும் தெருவாரியாக கரோனா தொற்று விவரமும் இடம்பெற்றுள்ளது. வெளி மாநிலங்களுக்கு செல்வதற்கு தேவையான பயண அட்டை பெறவிண்ணப்பிப்பதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதைபொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x