Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று - 7 தொகுதிகளில் 172 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை : பாதுகாப்புப் பணியில் 1,730 போலீஸார்

விழுப்புரம் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும் மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம்உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 172 சுற்றுகளாக வாக்குஎண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர், செஞ்சி, மயிலம், திண்டிவனம், விக்கிரவாண்டி, வானூர், விழுப்புரம் ஆகிய 7 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதில்செஞ்சி சட்டப்பேரவை தொகுதிக்குசெஞ்சிடேனி கல்வியியல் கல்லூரியில் 26 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதேபோல் மயிலம், திண்டிவனம் (தனி) சட்டப்பேரவை தொகுதிகளுக்கு திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரியில் மயிலம் தொகுதிக்கு 22 சுற்றுகளும், திண்டிவனம் தொகுதிக்கு 24 சுற்றுகளுமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

வானூர் (தனி) தொகுதிக்கு வானூர் அருகே ஆகாசம்பட்டு அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரில் 24 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

விழுப்புரம் சட்டப்பேரவை தொகுதிக்கு விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 27 சுற்றுகளாகவும், விக்கிரவாண்டி தொகுதிக்கு ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியில் 24 சுற்றுக்களாகவும், திருக்கோவிலூர் தொகுதிக்கு கண்டாச்சிபுரம் வள்ளியம்மை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25 சுற்றுக்களாகவும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், எஸ்பி ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 1,730 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x