Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் - அதிகபட்சமாக 30 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை :

கள்ளக்குறிச்சியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களை ஆட்சியர் கிரண் குராலா ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 2,93, 362 வாக்களர்களில் 2,41,965 வாக்காளர்களும், ரிஷிவந்தியம் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 2,68,231 வாக்காளர்களில் 2,13,629 வாக்காளர்களும், சங்கராபுரம் தொகுதியில் உள்ள 2,68,535 வாக்காளர்களில் 2,13,237 வாக்காளர்களும், கள்ளக்குறிச்சி தொகுதியில் உள்ள 2,86, 578 வாக்காளர்களில் 2,24,491 வாக்காளர்கள் என மொத்தம் 11,16,706 வாக்காளர்களில் 8,93, 322 வாக்காளர்கள் வாக்களித்தனர்.

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 1,823, ரிஷிவந்தியம் தொகுதியில் 1,167, சங்கராபுரம் தொகுதியில் 1,819, கள்ளக்குறிச்சி தொகுதியில் 1,832 என மொத்தம் 6,641 தபால் வாக்குகள் நேற்று முன்தினம் வரை பெறப்பட்டுள்ளது.

உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு30 சுற்றுகளும், ரிஷிவந்தியம் தொகுதிக்கு 27 சுற்றுகளும், சங்கராபுரம் தொகுதிக்கு 27 சுற்றுகளும், கள்ளக்குறிச்சி தொகுதிக்கு30 சுற்றுகளும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த வாக்கு எண்ணிக்கை பணியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்ற அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் உட்பட சுமார் 1,205 பேர் ஈடுபட உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x