ராமநாதபுரம் மாவட்டத்தில் - ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்க 27 குழுக்கள் அமைப்பு :

ராமநாதபுரம் மாவட்டத்தில் -  ஊரடங்கு கட்டுப்பாடுகளை  கண்காணிக்க 27 குழுக்கள் அமைப்பு :
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்க 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) பிரதீப்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: மாவட்டத்தில் தற்போது 1,065 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், ராமேசுவரம் நகராட்சிப் பகுதிகள், மண்டபம் மற்றும் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தொற்று பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இப்பகுதிகளில் தொற்றுநோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 13 கட்டுப்பாட்டுப் பகுதிகள் ஏற்படுத்தப்பட்டு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் பிற நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கண்காணிக்க மாவட்டத்தில் 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in