Regional01
குமாரபாளையம் வாரச்சந்தைக்கு தடை :
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் குமாரபாளையம் வாரச்சந்தைக்கு நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை கூடுவது வழக்கம். கரோனா தடுப்பு நடவடிக்கையாக, நேற்று நடைபெறயிருந்த வாரச்சந்தை மறு உத்தரவு வரும்வரை தடை செய்யப்படுவதாக நகராட்சி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக நகராட்சி ஆணையர் ஸ்டான்லிபாபு கூறியதாவது:
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவுக்கு மேல் உள்ள இடங்களில், மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வணிக வளாகங்கள் உள்ளிட்ட வியாபார நிறுவனங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனடிப்படையில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெற்று வந்த வாரச்சந்தை மறு உத்தரவு வரும்வரை நடத்த தடை செய்யப்படுகிறது, என்றார்.
