Published : 01 May 2021 03:15 am

Updated : 01 May 2021 03:15 am

 

Published : 01 May 2021 03:15 AM
Last Updated : 01 May 2021 03:15 AM

புதுச்சேரியில் புதிதாக 1,195 பேருக்கு கரோனா தொற்று : மேலும் 12 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி

புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் புதிதாக 1,195 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 பெண்கள் உட்பட 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் நேற்று வெளியிட்டுள்ள தகவல்:


புதுச்சேரி மாநிலத்தில் 6,451பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 855, காரைக்காலில் 174, ஏனாமில் 108, மாஹேவில் 58 என மொத்தம் 1,195 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரி கொசப்பாளையம் வ.உ.சி நகரைச் சேர்ந்த 81 வயது முதியவர், தவளக்குப்பம் அங்காளம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த 60 வயது முதியவர், மோகன் நகரைச் சேர்ந்த 62 வயது முதியவர், பூமியான்பேட்டையைச் சேர்ந்த 63 வயது முதியவர், உருளையன்பேட்டை மார்க்கெட் வீதியைச் சேர்ந்த 65 வயது முதியவர்,

பழைய சாரம் கிழக்கு வீதியைச் சேர்ந்த 59 வயது மூதாட்டி, பாகூர் பழைய காமராஜ் நகரைச் சேர்ந்த 40 வயது பெண், தட்டாஞ்சாவடி சுப்பையா நகரைச் சேர்ந்த 46 வயது பெண், சொக்கநாதன் பேட்டையைச் சேர்ந்த 64 வயது முதியவர், கருவடிக்குப்பம் மகாவீர் நகரைச் சேர்ந்த 74 வயது முதியவர், வி.பி.சிங் நகரைச் சேர்ந்த 67 வயது முதியவர் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 74 வயது முதியவர் என 3 பெண்கள் உட்பட

12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 805 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.37 ஆக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 58,622 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 1,754 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 7,765 பேரும் என மொத்தமாக 9,519 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 654 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 48,298 (82.39 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 7 லட்சத்து 96ஆயிரத்து 722 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 84 பேருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x