Published : 01 May 2021 03:15 AM
Last Updated : 01 May 2021 03:15 AM

வாக்குகள் எண்ணும் மையங்களில் அதிக பாதுகாப்பு : மதுரை காவல் ஆணையர், எஸ்பி நடவடிக்கை

வாக்குகள் எண்ணுவதற்கு 24 மணி நேரமே இருப்பதால், மதுரையில் வாக்குகள் எண்ணும் மையங் களில் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருப்பதாக நகர், புறநகர் போலீஸார் தெரி விக்கின்றனர்.

மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகள் உள்ளன. மதுரை மேற்கு, தெற்கு, வடக்கு, மத்தி ஆகிய 4 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மருத்துவக்கல்லூரியிலும், கிழக்கு, மேலூர் தொகுதிக்கான இயந்திரங்கள் ஒத்தக்கடை யிலுள்ள வேளாண்மைக் கல்லூரியிலும், திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், உசிலம்பட்டி, சோழவந்தான் தொகுதிகளுக்கான இயந்திரங்கள் தனக்கன்குளம் அண்ணா பல்கலை. வளாகத் திலும் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி வாக்குப் பதிவு மையங்களில் நகர் காவல்துறையும், வேளாண்மைக் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக மையத்தில் மாவட்டக் காவல் துறையும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கின்றன.

ஒவ்வொரு மையத்திலும் 3 ஷிப்ட்களில் டிஎஸ்பி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பை மேற்கொண்டு வரு கின்றனர்.

காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா, காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உள்ளிட்டோர் பாது காப்பை ஆய்வு செய்கின்றனர்.

வாக்கு எண்ணும் மையங்களில் அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது. இன்று (மே 1) இரவு கூடுதல் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாளை (மே 2) பகலிலும் ஒவ்வொரு மையத்திலும் கூடுதல் போலீஸாரை பாதுகாப்புக்கு நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: வாக்குகளை எண்ணும் 24 மணி நேரத்துக்கு முன்பாக பாதுகாப்பை பலப் படுத்துவது வழக்கமான நட வடிக்கைதான். நாளை காலை ஒவ்வொரு மையத்திலும் தலா 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பை மேற்கொள்வர்.

சட்டம், ஒழுங்கை கருத்தில் கொண்டு துணை காவல் ஆணை யர்கள், கூடுதல் எஸ்பிக்கள் தலைமையில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுவர். வேட் பாளர்களும், அந்தந்த கட்சி முகவர்களும் விதிமுறைகளை பின்பற்றி வாக்கு எண்ணும் பணியி லுள்ள அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் காவல்துறையினருக்கும் ஒத்துழைக்க வேண்டும் என்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறி யியல் கல்லூரி வளாகத்தில் நாளை (மே 2) நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை நடை பெறும் மையத்தில் அன்றைய தினம் அதிகாலை முதல் 80 துணை ராணுவப் படையினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 90 பேர், ஆயுதப்படை போலீஸார் 80 பேர், 230 உள்ளூர் போலீஸார் மற்றும் 30 போக்குவரத்து காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படு கின்றனர்.

மேலும் பாதுகாப்புப் பணிகளை முறைப்படுத்துவதற்கு காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் தலைமையில் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 4 டிஎஸ்பிக்கள், 13 ஆய்வாளர்கள், 3 போக்குவரத்து காவல் ஆய்வாளர் கள், 42 சார்பு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் வெற்றி கொண்டாட் டங்களைத் தடுக்கும் வகையில் 12 அதிரடிப்படைப் பிரிவு ஏற்படுத்தப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x