Published : 01 May 2021 03:15 am

Updated : 01 May 2021 03:15 am

 

Published : 01 May 2021 03:15 AM
Last Updated : 01 May 2021 03:15 AM

மதுரையில் ஆசிரியர் வீட்டில் 26 பவுன் திருட்டு :

மதுரை

மதுரையில் ஆசிரியர் வீட்டில் 26 பவுன் நகைகள், ரூ.98 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

விளாச்சேரி அருகே சீனி வாசா காலனியில் வசிப்பவர் செந்தில்கிருஷ்ணன் (37). தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிகிறார். திருநகரில் வசித்த இவரது தந்தை காலமானதைத் தொடர்ந்து, கடந்த 24-ம் தேதி குடும்பத்தினருடன் அங்கு சென்று தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை செந்தில் கிருஷ்ணனின் உறவினர்கள் சீனிவாசா காலனிக்கு சென்ற போது, வீட்டின் கதவு உடைக்கப் பட்டு பீரோவில் இருந்த 26 பவுன் நகைகள், ரூ.98 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டைபோலீஸார் விசாரித்து வருகின்றனர்.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x