

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள சுனைபுகநல்லூர் குடித்தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் திலகன் (எ) மணி (20). மணல் கடத்தல் வழக்கில் மண்ணச்சநல்லூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர், தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உடையவர் என்பதால் எஸ்.பி மயில்வாகனன் பரிந்துரையின்பேரில், திலகனை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி நேற்று உத்தரவிட்டார்.