

தமிழகத்தின் மத்திய மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் அதிகபட்சமாக திருச்சியில் புதிதாக 450 பேருக்கு கரோனா நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரியலூரில் 73, கரூரில் 176, நாகப்பட்டினத்தில் 161, பெரம்பலூரில் 34, புதுக்கோட்டையில் 148, தஞ்சாவூரில் 352, திருவாரூரில் 177, திருச்சியில் 450 என மத்திய மண்டலத்தில் மொத்தம் 1,571 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வருபவர்களில் தஞ்சாவூரில் 3 பேர், அரியலூர், கரூர், நாகை ஆகிய இடங்களில் தலா ஒருவர் என மொத்தம் 6 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.