

கரூர் மாவட்டத்தில் கரூர் கோட்டாட்சியர், குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள், ஒன்றிய அலுவலகங்கள் என 11 இடங்களில் நேற்றும், நேற்று முன்தினமும் கரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இதில், அரசு ஊழியர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் பரிசோதனை செய்துகொண்டனர்.
மேலும், தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களான கரூர் கோட்டாட்சியர், குளித்தலை சார் ஆட்சியர், அரவக்குறிச்சி மற்றும் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகங்கள் ஆகிய 4 இடங்களில கரோனா தடுப்பூசி போடும் 3 நாள் சிறப்பு முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த முகாம் 3-வது நாளாக இன்றும் (மே 1) நடை பெறுகிறது.