

கரோனா கட்டுப்பாடுகளுடன் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து சமுதாய முன்னேற்ற நலச்சங்கம், திருநெல்வேலி, தென்காசி மாவட்டசவரம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
மனு விவரம்: முடிதிருத்தும் தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் அதிகமானோர் சலூன் கடைகளை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 26-ம் தேதி முதல் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் செயல்பட்டு வந்த சலூன் கடைகளை அடைக்க உத்தரவிட்டப்பட்டது.
அதன்படி சலூன் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று பரவாத வகையில் கட்டுப்பாடுகளுடன் சலூன் கடைகள் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.