மறைந்த முன்னாள் அமைச்சர் சி.அரங்கநாயகம் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை :

விஐடியில் நடந்த நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் அமைச்சர் சி.அரங்கநாயகம் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய துணைத்தலைவர் ஜி.வி.செல்வம்.
விஐடியில் நடந்த நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் அமைச்சர் சி.அரங்கநாயகம் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய துணைத்தலைவர் ஜி.வி.செல்வம்.
Updated on
1 min read

மறைந்த தமிழக முன்னாள் அமைச்சர் சி.அரங்கநாயகம் உருவப்படத்துக்கு விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் மரியாதை செலுத்தினார்.

தமிழக முன்னாள் அமைச்சர் சி.அரங்கநாயகம் உடல் நலக் குறைவால் சில நாட்களுக்கு முன்பு காலமானார். இவர், எம்ஜிஆர் அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். இவரது காலகட்டத்தில் கல்வித்துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவித்து பல மாற்றங்களை கொண்டு வந்தார். மேலும், விஐடி பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கியவர். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் கல்வித்துறை அமைச்சராக இருந்துள்ளார். இதற்கிடையில், விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் உருவப்படத்துக்கு விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப் போது, பல்கலைக்கழக பதிவாளர் சத்தியநாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in