Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் - வாக்கு எண்ணும் மையங்களில் 1,600 காவல் துறையினர் பாதுகாப்பு : கரோனா தொற்று இல்லா சான்றுடன் முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயம்

வேலூர், ராணிப்பேட்டை மாவட் டங்களில் உள்ள நான்கு வாக்கு எண்ணும் மையங்களில் நாளை சுமார் 1,600 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடை பெற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளை (மே-2-ம் தேதி)நடைபெறவுள்ளது. இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது. இதில், வேலூர் மற்றும் அணைக்கட்டு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வேலூரில் உள்ள தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத் திலும், காட்பாடி தொகுதிக்கு அரசு சட்டக் கல்லூரி வளாகத்திலும், குடியாத்தம் மற்றும் கே.வி.குப்பம் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும் நடைபெறவுள்ளன.

மூன்றடுக்கு பாதுகாப்பு

அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை யின் போது வேலூர் மாவட்டத்தில் உள்ள 3 மையங்களில் அதிக அளவில் காவல் துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதற்காக, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் மேற்பார்வையில் காவல் துறையினர் 1,100 பேரும், 230 துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடு கின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கான வாக்கு எண்ணிக்கை ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி வளாகத்தில் எண்ணப் படவுள்ளன. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் தலைமையில் சுமார் 500 காவல் துறையினர் மற்றும் 80 பேர் அடங்கிய ஒரு கம்பெனி துணை ராணுவப்படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

வாக்கு எண்ணும் மையத்துக்கு வருபவர்கள் கல்லூரியின் கிழக்குப்பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு தனியாக இடம் அமைக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி இரண்டு முறை போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை கண்டிப்பாக கொண்டுவரவேண்டும். மேலும், வாக்கு எண்ணும் மையத்துக்கு வருபவர்கள் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை எடுத்துவரக் கூடாது. முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.

வாக்கு எண்ணும் மையத்துக்கு வருபவர்கள் பணி முடியும் வரை வெளியில் செல்லக்கூடாது. வெற்றி கொண்டாட்டங்கள் ஊர்வலம் செல்லுதல், கூட்டம் கூடுதல், பட்டாசு வெடித்தல், தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்தல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x