

திருநெல்வேலி தனித்தமிழ் இலக்கிய கழகத்தின் சார்பில் பாளையங்கோட்டையிலுள்ள மாநில தமிழ்ச் சங்கத்தில் பேராசிரியர் சாலை இளந்திரையன் இலக்கிய தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. பேராசிரியர் பா. வளன்அரசு தலைமை வகித்தார்.
தி.முகுந்தன் வரவேற்றார். சாலை இளந்திரையன் எழுதிய ‘உரைவீச்சு’ நூல் குறித்து புலவர் வீ. செந்தில்நாயகம் சிறப்புரை ஆற்றினார். முனைவர் வை.ராமசாமி, செந்தில்நாயகம் ஆகியோருக்கு திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டது. உறுப்புநலன் அழிதல் குறித்து சேம்சுராசு சிறப்புரை ஆற்றினார். இரா. முருகன் நன்றி கூறினார்.