

திருச்சியில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 480 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரியலூரில் 62, கரூரில் 125, நாகப்பட்டினத்தில் 294, பெரம்பலூரில் 18, புதுக்கோட்டையில் 98, தஞ்சாவூரில் 287, திருவாரூரில் 154, திருச்சியில் 480 என மத்திய மண்டலத்தில் மொத்தம் 1,518 பேருக்கு புதிதாக நேற்று கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
திருச்சியில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
ஏப்.24-ம் தேதி 302 பேரும், 25-ம் தேதி 343 பேரும், 26-ம் தேதி 398 பேரும், 27-ம் தேதி 468 பேரும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று 480 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருந்தவர்களில் கரூர், தஞ்சாவூர், திருச்சி ஆகிய இடங்களில் தலா ஒருவர் மற்றும் புதுக்கோட்டையில் 2 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.
கரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் அரியலூரில் 28, கரூரில் 73, நாகையில் 154, பெரம்பலூரில் 8, புதுக்கோட்டையில் 119, தஞ்சாவூரில் 261, திருவாரூரில் 154, திருச்சியில் 505 என 1,248 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போது, அரியலூரில் 328, கரூரில் 840, நாகையில் 1,525, பெரம்பலூரில் 133, புதுக்கோட்டையில் 719, தஞ்சாவூரில் 2,087, திருவாரூரில் 965, திருச்சியில் 2,837 பேர் சிகிச்சையில் உள்ளனர்.