

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் 37 உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு காணிக்கைகள் கணக்கிடப்பட்டன.
இதில் ரூ. 55,03,229 ரொக்கம், தங்கம் 1 கிலோ 674 கிராம், வெள்ளி 2 கிலோ 106 கிராம், அயல்நாட்டு நோட்டுகள் 22 இருந்தன.
உண்டியல் திறப்பு நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி, அறநிலையத்துறை இணை ஆணையர் அர.சுதர்சன், உதவி ஆணையர்கள் டி.விஜயராணி (தாயுமானசுவாமி கோயில்), செ.மாரியப்பன் (திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில்), கோயில் மேலாளர் ம.லட்சுமணன், அறநிலையத்துறை ஆய்வர் கு. தமிழ்ச்செல்வி மற்றும் அலுவலர்கள், கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர்.