

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும், தொகுதி வாரி யாக நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை சுற்றுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேர் தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான எஸ்.திவ்ய தர்ஷினி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு ஆகிய தொகுதிகளுக்கு ஜமால் முகமது கல்லூரியிலும், லால்குடி, மண்ணச்சநல்லூர் ஆகிய தொகுதிகளுக்கு சமயபுரம் கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியிலும், முசிறி, துறையூர் ஆகிய தொகுதிகளுக்கு கண்ணனூர் இமயம் பொறியியல் கல்லூரியிலும், மணப்பாறை, ரங்கம், திருவெறும்பூர் ஆகிய தொகுதிகளுக்கு திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திலும் தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொகுதி வாரியாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கை சுற்றுகள் விவரம்: மணப்பாறை 30, ரங்கம் 32, திருச்சி மேற்கு 28, திருச்சி கிழக்கு 27, திருவெறும்பூர் 30, லால்குடி 22, மண்ணச்சநல்லூர் 25, முசிறி 24, துறையூர் (தனி) 23 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.