

கரோனா பரவல் திருச்சி மாவட் டத்தில் அதிகரித்து வரும் நிலையில், கரோனாவுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக, தனியார் மருத்துவமனை மருத்துவர்களுட னான ஆய்வுக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கூட்டத்துக்குத் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி பேசியது: கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க திருச்சி மாவட்டத்தில் எஸ்ஆர்எம் மருத் துவக் கல்லூரி மருத்துவமனை, தென்னூர் காவேரி மெடிக்கல் சென்டர், மாருதி மருத்துவமனை, மணப்பாறை சிந்துஜா மருத்துவ மனை, சுந்தரம் மருத்துவமனை, திருச்சி அப்போலோ மருத்துவ மனை, பங்கஜம் சீதாராம் மருத்துவமனை, நியூரோ ஒன் மருத்துவமனை, டாக்டர் ஜி.விஸ்வநாதன் மருத்துவமனை, தில்லைநகர் திருச்சி மெடிக்கல் சென்டர், ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனை, வெங்க டேஸ்வரா மருத்துவமனை, ரத்னா குளோபல் மருத்துவமனை, ஆத்மா மருத்துவமனை, திருச்சி வேலன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மங்கலம் மருத்துவமனை, கவி மருத்துவமனை- நியூரோ பவுன்டேசன் மருத்துவமனை, எம்எம்எம் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை, ராயல்பேர்ல் மருத்துவமனை, ஏ.ஜே. மருத்துவமனை ஆகிய 20 மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த மருத்துவமனைகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் படுக்கை வசதிகளை அதிகரிக்கவும், போதிய அளவு ஆக்சிஜனை இருப்பில் வைக்க வும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனை யில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற நிலை ஏற்படக் கூடாது. இந்திய சுகாதாரம் மற்றும் மாநில சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி உரிய விதிமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.