

திருநெல்வேலி மாவட்ட மனித நேயமக்கள் கட்சி துணை செயலாளர் அ. காஜா, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: மேலப்பாளையம் அருகே உள்ள முன்னீர்பள்ளம் மந்தை பேருந்துநிறுத்தம் அருகே சில நாட்களுக்குமுன் வீசிய சூறைக்காற்று மற்றும் கனமழையால் இரும்புக் கம்பம் சரிந்து அபாயநிலையில் உள்ளது. இதனால் விபத்துஏற்படும் அபாயம் உள்ளது. எனவேசம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவு பிறப்பித்து இரும்புக் கம்பத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.