

கரோனா தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளவர்களின் தேவையை கருத் தில் கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்என இந்திய தொழில் வர்த்தக சபைகோவை பிரிவு தலைவர் சி.பாலசுப் ரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்து வருகின்றனர். வடமாநிலங்களில் இது மிகவும் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் தற்போது நாளொன்றுக்கு 400மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. தமிழகத்தில் உள்ள ஆலைகளில் 20 மெட்ரிக் டன் உற்பத்தி அளவுக்கான திறன் உள்ளது. ஆனால் இந்த ஆலைகளுக்கு மருத்துவ ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி இல்லை.
கரோனாவால் பாதிக்கப்பட்டுள் ளவர்களுக்கான தேவையை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு கூடுதல் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய வேண்டிய தேவை உள்ளது.தற்போதுள்ள சூழலை கருத்தில் கொண்டு தமிழக அரசுதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையில் இரண்டு பெரிய ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் உள்ளன. அவை நாளொன்றுக்கு 1000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. மருத்துவமனைகள், மருத்துவ மையங்களில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களுக்கு இதைப் பயன்படுத்தலாம். உயிரிழப்பு களையும் தவிர்க்கலாம். பலமாநிலங்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க ஆக்ஸிஜன் இல்லாமல் தடுமாறி வருகின்றன. தமிழகத்துக்கு நல்லவேளையாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை உள்ளது.
கடந்த வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய நீதிபதிகள், “ஆலைகளை யாருடையது என்று பாராமல், திறனுள்ள இடங்களில் இருந்து ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய வேண்டியது அவசியமானது” என்று தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களிடம், கரோனாவால் பாதிக்கப்பட் டுள்ளவர்களின் நிலை, ஆக்ஸிஜன் தேவை உள்ளிட்டவற்றை எடுத்துக்கூறி சமாதானப்படுத்த வேண்டியதுஅரசின் கடமை. இந்த நடவடிக்கை மூலமாக தமிழகத்தில் உள்ள கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களை மட்டுமில்லாது, பிற மாநிலங்களுக்கும் ஆக்ஸிஜன் அளித்து உதவ முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.