

டாஸ்மாக் மதுக்கடையின் பூட்டைஉடைத்து ரூ.10 லட்சம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
கோவை லாலி ரோட்டில் உள்ளடாஸ்மாக் மதுக்கடையில் சூப்பர்வைசராக பணியாற்றுபவர் வேலுசாமி. கடையில் கடந்த 23, 24-ம் தேதிகளில் வசூலான தொகைரூ.10 லட்சத்தை இருப்பில் வைத்திருந்தனர். சனிக்கிழமை இரவு வியாபாரம் முடிந்தவுடன் ஊழியர்கள் கடையை பூட்டிச் சென்றனர்.ஊரடங்கு முடிந்து நேற்று மதியம் சூப்பர்வைசர் வேலுசாமி,கடையை திறக்க வந்தார்.அப்போது, கடையின் முன்பக்க ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந் தது. உள்ளே மேஜை டிராயரை உடைத்து, அதிலிருந்த ரூ.10 லட்சம் தொகை மற்றும் 30-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுபற்றி ஆர்.எஸ்.புரம் போலீஸில் வேலுசாமி புகார் செய்தார். குற்றப்பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து,அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.