

இதுதொடர்பாக ராயபுரத்தைச் சேர்ந்த அரவிந்த் தாக்ஷன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘அதிமுக தி.நகர் எம்எல்ஏ சத்யா என்ற சத்தியநாராயணனுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக கடந்த 2017-18 காலகட்டத்தில் குடிநீர் வசதிகளை மேம்படுத்த ரூ. 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதில் ரூ.8 லட்சத்தை மட்டுமே அவர் குடிநீர் குழாய்கள் அமைக்க பயன்படுத்தியுள்ளார். எஞ்சிய தொகையை சாலைகள் பராமரிப்புக்கு செலவழித்துள்ளார். அந்த தொகையையும் குறிப்பிட்ட நபரின் டெண்டருக்காக ஒதுக்கிக் கொடுத்துள்ளார். மாநகராட்சி அதிகாரிகளி்ன் உடந்தையுடன் இந்த முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து லஞ்சஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பவானி சுப்பராயன், இதுதொடர்பாக லஞ்சஒழிப்புத் துறை 2 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.