

விழுப்புரம் அருகே கத்தியால் குத்தப்பட்ட பெண் உயிரிழந்தார்.
விழுப்புரம் அருகே சின்ன செவலை கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவதி (38). இவருக்கு திருமணம் ஆகவில்லை.
உடல் வளர்ச்சி குன்றிய இவர் கடந்த 10-ம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
அதே ஊரைச் சேர்ந்தவர்முத்துக்கண்ணு (60). மனநிலைபாதிக்கப்பட்ட இவர் தனது மாட்டை கொன்று விட்டு மனைவி நாவம்மாளை அடிப்பதற்கு விரட்டிச் சென்றார்.
அப்போது நாவம்மாள் ரேவதியின் வீட்டின் வழியாக ஓடிவிட்டார்.
இந்த நிலையில் ரேவதி யின் வீட்டுக்குள் சென்ற முத்துக்கண்ணு ரேவதியை கத்தியால் வெட்டினார்.
மயங்கி விழுந்த ரேவதி சிகிச்சைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, முத்துக்கண்ணுவை கைது செய்தனர். இதற்கிடையே புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரேவதி சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.