

சின்னசேலம் அருகே வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் செயினை பறித்துச் சென்றனர்.
சின்னசேலத்தை அடுத்த வடக்கநந்தல் வடக்குத் தெருவைச் சேர்ந்த வேல்முருகன் மனைவி அபிநயா(29). நேற்று முன் தினம் வீட்டின் மொட்டை மாடியில் வேல்முருகன் தூங்கிக் கொண்டிருக்க, அருகில் அவரது மனைவி அபிநயாவும், அவரது மகனும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அபிநயா கழுத்திலிருந்து செயினை மர்ம நபர்கள் அறுத்த போது, வலி ஏற்பட்டு அபிநயா கூச்சலிட்டுள்ளார். அவர் திடுக்கிட்டு எழுந்த போது, இரு மர்ம நபர்கள், செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து கச்சிராயப்பாளையம் காவல் நிலையத்தில் அபிநயா அளித்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிபோன செயின் 9 பவுன் எனவும், அதன் மதிப்பு ரூ.3.5 லட்சம் எனக் கூறப்படுகிறது.