விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கும், காயம் அடைந்தவர் களுக்கும் இழப்பீடு வழங்க வலியுறுத்தி, சேலம் குரங்குச்சாவடி சேகோ சர்வ் நிறுவனம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜில்லா சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தினர். 		         படம்: எஸ். குரு பிரசாத்
விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கும், காயம் அடைந்தவர் களுக்கும் இழப்பீடு வழங்க வலியுறுத்தி, சேலம் குரங்குச்சாவடி சேகோ சர்வ் நிறுவனம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜில்லா சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தினர். படம்: எஸ். குரு பிரசாத்

சேகோ சர்வ் லாரி கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு : இழப்பீடு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Published on

சேலம் சேகோ சர்வ் லாரி கவிழ்ந்த தில், தொழிலாளி உயிரிழந்தார். மேலும், 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதனிடையில், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்திசுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் குரங்குச்சாவடியில் உள்ள சேகோ சர்வ் நிறுவனத்தில் இருந்து நேற்றுசேகோ லோடுடன் தொழிலாளர்களை ஏற்றிய லாரி நாமக்கல்லுக்கு சென்று கொண்டிருந்தது. மல்லூர் அடுத்த சந்தியூர் ஆட்டையாம்பட்டி அருகே லாரி சென்றபோது, சாலையின் குறுக்கே சென்ற நாய் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பிரேக் போட்டத்தில் எதிர்பாராதவிதமாக லாரி கவிழ்ந்தது.

இதில், லாரியில் இருந்த சேலம் சின்னபுதூரைச் சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளிகள் ஹரிபாஸ்கர் (42), மணிகண்டன் (39), பிரபு (37), ஆறுமுகம் (21), கிருஷ்ணன் (55), அருண்குமார் (21) உள்ளிட்டோர் பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச் சைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஹரிபாஸ்கர் உயிரிழந்தார். இதுதொடர்பாக மல்லூர் எஸ்ஐ ரவிச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதனிடையே, சுமை தூக்கும் தொழிலாளர்கள் சேலம் சேகோ சர்வ் நிறுவனம் முன்பு திரண்டு உயிரிழ்த ஹரிபாஸ்கர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தி, பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பணி புறக்கணிப்பால், சேகோ சர்வ் நிறுவனத்தில் 20 ஆயிரம் மூட்டைகள் தேக்கமடைந்தன. மேலும், 50 லாரிகளில் லோடு ஏற்றும், இறக்கும் பணி பாதிக்கப் பட்டன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in