Published : 27 Apr 2021 06:30 AM
Last Updated : 27 Apr 2021 06:30 AM
திருச்சி: திருச்சி பஞ்சப்பூரில் 1998-ல் தொடங்கப்பட்டு முன்னணி கல்வி நிறுவனமாக செயல்பட்டு வரும், சாரநாதன் பொறியியல் கல்லூரி, ‘நாக்’ குழுவின் தரச்சான்றுக்காக அண்மையில் முதல் முறையாக விண்ணப்பித்தது. அதன் தொடர்ச்சியாக, தலைவர், உறுப்பினர் செயலாளர் மற்றும் தரமான மதிப்பீட்டுக்கான ஒரு உறுப்பினர் ஆகியோர் அடங்கிய3 பேர் கொண்ட ‘நாக்’ குழுவினர் ஏப்.8, 9-ம் தேதிகளில் கல்லூரியில் நேரடி ஆய்வு செய்தனர். இதில், அதிகபட்சம் 4 புள்ளிகளில் 3.27 புள்ளிகளை பெற்ற இக்கல்லூரிக்கு, ஏ தரச்சான்று வழங்கப்பட்டது.
பாடத்திட்ட அம்சங்களிலும், உள்கட்டமைப்பு மற்றும் கற்றல் வளங்களிலும் நாக் குழுவின் அதிக மதிப்பீட்டு புள்ளிகளை கல்லூரி பெற்றது. இந்தக் கல்லூரியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கற்பித்தல்- கற்றல் முறையை அளவுகோலாக அளவிடக்கூடிய விளைவுகளாக மாற்றியமைத்த- கல்லூரியிலேயே உருவாக்கப்பட்ட மென்பொருள் குறித்து நாக் ஆய்வுக் குழு பாராட்டி சிறப்புப் குறிப்பையும் கொடுத்தது.
இந்த மென்பொருள் ஒவ்வொரு கற்பித்தல்- கற்றல் செயல்பாட்டுக்கும் சாதகமான விளைவுகளை உறுதி செய்கிறது. நாக் குழுவின் ஏ தரச்சான்று மதிப்புமிக்க மானியங்கள் மற்றும் திட்டங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை மேம்படுத்துவது மட்டுமின்றி, இந்தக் கல்லூரி தன்னாட்சி அந்தஸ்தைப் பெறு வதற்கு உதவும். தற்போது இந்தக் கலூரியில் உள்ள 7 பொறியியல் துறைகளில் 6 துறைகள் ஏற்கெனவே என்பிஏ(NBA) அங்கீகாரம் பெற்றவை என்பது குறிப்பி டத்தக்கது.
சாரநாதன் பொறியியல் கல்லூரியில் வரும் கல்வியாண்டில் தொழில் சார்ந்த படிப்புகளை (B.Tech.-Artificial Intelligence and Data Science மற்றும் B.Tech. Computer Science and Business Systems) தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என கல்லூரியின் செயலாளர் எஸ்.ரவீந்திரன், முதல்வர் டி.வளவன் ஆகியோர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT