தி.கோட்டில் அனுமதியின்றி செயல்பட்ட 3 மசாஜ்  நிலையங்களுக்கு ‘சீல்’ :

தி.கோட்டில் அனுமதியின்றி செயல்பட்ட 3 மசாஜ் நிலையங்களுக்கு ‘சீல்’ :

Published on

நாமக்கல்: திருச்செங்கோட்டில் அனுமதியின்றி செயல்பட்ட 3 மசாஜ் நிலையங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

திருச்செங்கோட்டில் அனுமதியின்றி மசாஜ் நிலையங்கள் இயங்கி வருவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக திருச்செங்கோடு துணை வட்டாட்சியர் சரவணக்குமார் தலைமையிலான வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது திருச்செங்கோடு பரமத்தி சாலையில் 3 கேரள மசாஜ் நிலையங்கள் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

இவற்றை துணை வட்டாட்சியர் சரவணக்குமார் தலைமையிலான அதிகாரிகள் உத்தரவின்படி 3 மசாஜ் நிலையங்களையும் பூட்டி சீல் வைத்தனர். மேலும், அனுமதியின்றி இதுபோன்ற மசாஜ் நிலையங்கள் செயல்படுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in