

புதுச்சேரி இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் எஸ்.ஆனந்தகுமார், புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு நேற்று அனுப்பியுள்ள மனு வில் கூறியிருப்பது:
புதுச்சேரியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள் ளது. எனவே, அனைத்துக் கல்லூரிகளிலும் எதிர் வரும் பருவத்துக்கான பாடங்களை, பேராசிரியர்கள் வீட்டிலிருந்து இணைய வழியில் மட்டுமே கற்பிக்கும் வகையில், புதுச்சேரி அரசின் உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க துணை நிலை ஆளுநர் உத்தரவிட வேண்டும். இல்லையெனில், பேராசிரியர்களுக்கு தலா ரூ.50 லட்சம், மாணவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் காப்பீடு செய்து, அதற்கான நிதியை ஒதுக்கி, உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.