தென்காசி அருகே இலஞ்சியில் இடப் பிரச்சினையில் - இரு தரப்பினர் மோதல்: 6 பேர் கைது :

தென்காசி அருகே இலஞ்சியில் இடப் பிரச்சினையில்  -  இரு தரப்பினர் மோதல்: 6 பேர் கைது  :
Updated on
1 min read

இலஞ்சியில் இடப் பிரச்சினையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம், இலஞ்சியைச் சேர்ந்தவர் முருகன். இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார்.கடை வைத்துள்ள இடம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் முருகன் மற்றும் அவரதுசகோதரர்கள் பாலசுப்பிரமணியன், ஆறுமுகம் ஆகியோர் சேர்ந்து டீக்கடையை பிரித்து வேலை செய்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த இசக்கி, ரமேஷ்,ரத்தினம், நடராஜன் ஆகியோர், வழக்கு நிலுவையில் உள்ளபோது கடையை எப்படி பிரித்து வேலை செய்யலாம் என்று கேட்டுள்ளனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், இரு தரப்பினரும் கத்தி மற்றும் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தகுற்றாலம் போலீஸார் உடனடியாக அங்கு வந்து மோதலை தடுத்தனர். மோதலில் காயம் அடைந்தஇசக்கி தென்காசி அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து, பாலசுப்பிரமணியன், முருகன், ஆறுமுகம், ரமேஷ், லெட்சுமணன், நடராஜன் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in