

கடலூர் மாவட்டத்தில் இரவு ஊரடங்கை மீறிய 86 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கும் அமல் படுத்தப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் இரவு ஊரடங்கை மீறிய 86 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 43 இருசக்கர வாகனம், 2 மூன்று சக்கர வாகனம், 7 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 2-ம் அலையில் முகக்கவசம் அணியாத 13 ஆயிரத்து 751 பேர் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 230 பேருக்கும் மொத்தமாக ரூ. 27 லட்சத்து 67 ஆயிரத்து 150 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.