ராமநாதபுரத்தில் -  போதையில் கடையில் தகராறு காவலர் பணியிடை நீக்கம் :

ராமநாதபுரத்தில் - போதையில் கடையில் தகராறு காவலர் பணியிடை நீக்கம் :

Published on

ராமநாதபுரத்தில் மதுபோதையில் பலசரக்கு கடையில் தகராறில் ஈடுபட்டதாக ஆயுதப்படைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் பட்டணம் காத்தான் வடக்கு 4-வது தெருவில் பலசரக்கு கடை நடத்தி வருபவர் நாகசேகர் (45). கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ராமநாதபுரம் ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றும் தங்கப்பாண்டியன்(36) மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து நாகசேகரின் பலசரக்கு கடையில் மோதியுள்ளார்.

இதை நாகசேகர் தட்டிக்கேட்டதும், அவரிடம் தங்கப்பாண்டியன் தகராறு செய்து பலசரக்கு பொருட்கள், கண்ணாடி பாட்டிலில் இருந்த பொருட்களைச் சேதப்படுத்தினார்.

இதுகுறித்து நாகசேகர் அளித்த புகாரின்பேரில், கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து காவலர் தங்கப்பாண்டியனைக் கைதுசெய்தனர்.

அதனையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் ஆயுதப்படை காவலர் தங்கப் பாண்டியனை, நேற்று பணியிடை நீக்கம் செய்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in